கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ,ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ,ஆ.ப., அவர்கள் வழங்கினார்.;

Update: 2025-04-22 17:06 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கட்;டுமான தொழிலாளர் நலவாரியம் சார்பில், பணியிடத்து விபத்தில் மரணமடைந்த 6 கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் வழங்கினார். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் தமிழ்நாடு உடலுழைப்பு நலவாரியம் முதலான 20 நலவாரியங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் துறையின் கீழ் செயல்படுத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 20 அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் நிதி உதவி விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற ஃ பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.5,00,000- வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த திரு.விஜய் த/பெ.சேகர், திரு.கண்ணன் த/பெ.மாரியப்பன், திரு.நாகேந்திரன் த/பெ.சுப்புராஜ், திரு.சிங்கதுரை த/பெ.கந்தசாமி, திரு.கருப்பையா த/பெ.ஆறுமுகம் மற்றும் திரு.சரவணன் த/பெ.பெரியசாமி ஆகிய 6 கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30 இலட்சம் உதவித்தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Similar News