ஆம்பூர் அருகே 30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் எம்எல்ஏ திறப்புவிழா செய்தார்
ஆம்பூர் அருகே 30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் எம்எல்ஏ திறப்புவிழா செய்தார்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் எம்எல்ஏ திறப்புவிழா செய்தார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய குப்பம் ஊராட்சியில் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றன இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார் முன்னிலை ஒன்றிய கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் சுரேஷ்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில் வகித்தனர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார் அலுவலகத்தில் உள்ள குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் பேசும் பொழுது மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரியங்குப்பம் ஊராட்சி மக்கள் தொகை அதிகமாகக் கொண்டது இதில் கலைஞரின் கனவு இல்லம் 56 நபர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் கொடுக்கப்பட்டுள்ளது பல எண்ணற்ற செயல்கள் திமுக ஆட்சியில் நடைபெற்று வருகிறது என பெருமிதமாக பேசினார் இந்த நிகழ்ச்சியில் அய்யனூர் அசோகன் ஒன்றிய குழு உறுப்பினர் ஜவகர் பாபு ஒன்றிய துணை செயலாளர் தேவநாயகம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்