பணம் மோசடி செய்த திண்டுக்கல் டெய்சிராணி உட்பட 30 பேர் கைது
ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாக பயன்படுத்தி இரிடியம் விற்பனை மூலமாக வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவதாக கூறி, பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த திண்டுக்கல் டெய்சிராணி உட்பட 30 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் உட்பட 2 பேர் கைது - பாதிக்கப்பட்டவர்கள் CBCID- போலீஸில் புகார் அளிக்கலாம்;
இந்திய ரிசர்வ்வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து, முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி, இரிடியம் விற்பனை செய்வதால் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருவதாக கூறி, மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்சகணக்கில் பணம் பெற்று, ஏமாற்றி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை (CBCID) போலீசார் தமிழ்நாட்டில் 43 இடங்களிலும், வெளி மாநிலங்களில் 4 இடங்களிலும் என மொத்தம் 47 இடங்களில் சோதனையிட்டு 5 மோசடி கும்பல்களை சேர்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் சென்னை S.H.S. சுவாமிநாத, காட்பாடி ஜெயராஜ், குடுமியான்மலை ஏசி ரவிச்சந்திரன், மணப்பாறை ஞானப்பிரகாசம், திண்டுக்கல் டெய்சி ராணி ஆகியோருடன் சேர்த்து 30 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதைத் தொடர்ந்து திண்டுக்கல் டெய்சிராணியுடன் தொடர்புடைய பாலன் மற்றும் பெண் உட்பட 2 பேரை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை (CBCID) போலீசார் கைது செய்தனர் மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் CBCID- போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்யலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.