ஆளுநரை கண்டித்து தேனியில் மக்களவை உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி மூன்றே நிமிடத்தில் வெளியேறினார் இதனை தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரை அவமதிக்கும் வகையிலும் செயல்படும் ஆளுநரை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் தேனியில் தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓடிப்போ சட்டமன்றத்தை அவமதிக்கும் ஆளுநரை தமிழகத்தை விட்டு ஓடி போ எனவும் தமிழர்களை இழிவுபடுத்தும் ரவி ஆளுநர் பதவிக்கு தகுதி இல்லாதவர் எனவும் பாஜக ஏஜென்ட் அதிமுகவை புறக்கணிப்போம் என்றும் தமிழ் தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுநரே வெளியேறு எனபன பல்வேறு கண்டன கோஷங்களை திமுகவினர் எழுப்பினர்.