முதல்வர் மருந்தகம் ரூ.3.00 இலட்சம் மானியத்துடன் அமைக்க தகுதியானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்

முதல்வர் மருந்தகம் ரூ.3.00 இலட்சம் மானியத்துடன் அமைக்க தகுதியானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்;

Update: 2025-01-21 08:08 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2024 சுதந்திர தின விழா உரையில் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் எனவும், அவ்வாறு முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்களுக்கு ரூ.3 இலட்சம் மானியமாகவும் வழங்கப்படும். இதில், 50% (1.50 இலட்சம்) உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரொக்கமாகவும், மீதமுள்ள 50% (1.50 இலட்சம்) மருந்துகளாகவும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் 24.01.2025 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக் கொள்கிறார்.

Similar News