அருப்புக்கோட்டை அருகே இடி மின்னல் தாக்கி 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தீ பிடித்து எரிந்து சேதம்*

அருப்புக்கோட்டை அருகே இடி மின்னல் தாக்கி 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தீ பிடித்து எரிந்து சேதம்*;

Update: 2025-04-21 17:04 GMT
அருப்புக்கோட்டை அருகே இடி மின்னல் தாக்கி 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தீ பிடித்து எரிந்து சேதம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய இடி மின்னல் தாக்கியது.‌ இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே வடபாலை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவரின் வாழை தோட்டத்தில் இடி மின்னல் தாக்கியதில் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. இடி மின்னல் காரணமாக பச்சை வாழை மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.‌ இந்த சம்பவம் குறித்து திருச்சுழி காவல்துறையினர் மற்றும் வேளாண் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.‌ இடி மின்னல் தாக்கி வாழை மரங்கள் தீ பிடித்து எரிந்துள்ள நிலையில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.‌

Similar News