திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் புதிதய கட்டிடங்கள் திறப்பு

திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.89 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தை நல பிரிவு கட்டடங்களை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

Update: 2024-03-16 12:11 GMT
திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.89 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தை நல பிரிவு கட்டடங்களை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ரூ.6.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மகப்பேறு மற்றும் குழந்தை நல பிரிவு கட்டடங்களை திறந்து வைத்தார். பின்னர் மாண்புமிகு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி அதன் மூலம் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு புதிய கட்டடங்கள் மற்றும் சேவை பிரிவுகள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.6.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மகப்பேறு மற்றும் குழந்தை நல பிரிவு கட்டடங்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டடம் தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம், சாய்தளப்பாதை, முகப்பு மண்டலம் என மொத்தம் 27782.32 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் நோயாளி மீட்பு அறை, நிலைய மருத்துவர் அறை, சேமிப்பு அறை, வரவேற்பு அறை, பதிவு அறை, மருந்தகம், மருத்துவர் அறை, செவிலியர் அறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளுடனும், முதல் தளத்தில் மருத்துவர் அறை, செவிலியர் அறை, ஆய்வகம், கலந்தாய்வு அறை, வெளிநோயாளி அறை, பிரவசத்திற்கு பிந்தைய கவனிப்பு அறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளுடனும், இரண்டாம் தளத்தில் இரண்டு அறுவைச் சிகிச்சை அரங்குகள், மருத்துவர் அறை, செவிலியர் அறை, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை அறை, படுக்கை அறை, தீவிர சிகிச்சை கவனிப்பு அறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News