உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 347 மனுக்கள் பெறப்பட்டது

மதுரை மேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 347 மனுக்கள் பெறப்பட்டன.;

Update: 2025-08-19 15:04 GMT
மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 12, 17 வது வார்டுகளை சேர்ந்த காந்திநகர், கடலைகாரதெரு, ஆகிய பொதுமக்களுக்கு மேலூர் மூவேந்தர் பண்பாட்டுக் கழகத்தில் முகாம் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 347 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.இம்முகாமில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி, மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை, மேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லயனல் ராஜ்குமார், நகராட்சி துணைத் தலைவர் இளஞ்செழியன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், 12வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் அறிவழகன், 17 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்வம் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News