உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடந்த பட்டிமன்றத்தில் 3500-க்கும் மேற்பட்டமாணவிகள் பங்கேற்பு
எம் அன்னை தமிழ் மொழி என்றவரிகளின் வழி, ஒருநாளின் சூரிய உதயம் தொடங்கி மறைவதற்குள் கம்பர் அவர்கள் 700 கவிதைகளை எழுதும் வல்லமைக்குரியவர் என்று கூறி, தானும் அக்கம்பர் வழி வந்ததமிழன் என்று கூறுவதில் பெருமிதக் கொள்வதாகக் கூறினார்.;
உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு தமிழாய்வுத்துறை வானம்பாடி பேரவை நடத்திய சிறப்புபட்டிமன்றம் பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கல்லூரிக் கலையரங்கத்தில்; தமிழாய்வுத்துறை வானம்பாடி பேரவை சார்பாக உலகதாய்மொழிதினத்தை முன்னிட்டு‘ இன்றைய சூழலில் தமிழர் நாகரிகமும் பண்பாடும் சிகரங்களே! சிரமங்களே!’ என்றதலைப்பில் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமைவேந்தர் அ.சீனிவாசன் தலைமைவகித்தார். முனைவர் இரா. மேனகா, துறைத்தலைவர் வரவேற்புரை வழங்கினார். தனலட்சுமி சீனிவாசன் மகளிர்; கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து முனைவர் மா.செங்குட்டுவன் துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை அரசுகலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, அவர்கள் சிறப்புபட்டிமன்றத்தின் நடுவராக தலைமை தாங்கினார். முனைவர் நா. பாலசுப்பிரமணியன் இணைப்போராசிரியர் மற்றும் தலைவர் தமிழ்த்துறை சிக்கண்ணா அரசுகலைக் கல்லூரி திருப்பூர், சிகரங்களே! என்ற அணியின் தலைவராகப் பொறுப்பேற்று சிறப்பித்தார். முனைவர் ஆ.அங்கமுத்து இணைப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை அரசுகலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, சிரமங்களே! என்ற அணியின் தலைவராகப் பங்கேற்று சிறப்பித்தார். முனைவர் மு.ஜெயலட்சுமி இணைப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை காவேரிமகளிர் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி, சிகரங்களே! எனும் அணியிலும், ச.லோகநாதன் உதவிப்பேராசிரியர், ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி தஞ்சாவூர், சிரமங்களே! எனும் அணியிலும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கினர். செல்வி.வை.சுஸ்மிதா, செல்வி.சி.சண்முகபிரியா இளநிலை மூன்றாம் ஆண்டு உளவியல் துறை தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி, பெரம்பலூர் ந.காருண்யா முதுகலை தமிழிலக்கியம், செல்வி.சா.சிவசங்கரி இளநிலை மூன்றாம் ஆண்டு உளவியல் துறை தனலட்சுமி சீனிவாசன் மகளிர்; கல்லூரி, பெரம்பலூர் ஆகியோர் பட்டிமன்றத்தில் தங்களது பங்களிப்பை வழங்கினர். உரை நிகழ்த்திய அறிஞர்கள் நமது மாண்பமைவேந்தர் ஐயா அவர்கள் தமிழின் பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் முதன்மை அடையாளமாகத் திகழ்கிறார் என்று பெருமிதத்துடன் கூறினார்கள். இன்றைய சிறப்புப் பட்டிமன்றத்தில் நடுவர் அவர்கள் தமிழின் தொன்மைப் பற்றியும், சங்ககாலத்தில் இருந்து இன்று வரை நமது தாய் மொழி தன்னிலைமாறாது மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக இருந்து வருகின்றது என்றும் பண்பாடு என்பது நமது உள்ள தூய்மையான அகஅழகையும், நாகரிகம் என்பது வெளித்தோற்ற அழகான புறஅழகையும் குறிக்கும் என்றும் பண்பாடு மற்றும் நாகரிகத்திற்கான விளக்கத்தை வழங்கினார்கள். “அகம் மகிழபுறம் மகிழ கற்றறிவு மேலோங்கி வையகம் எல்லாம் வாழ்த்து முழங்க பெற்ற அன்னை அன்னத்துடன் ஊட்டிவளர்த்த அன்புமொழியாம் தமிழ் மொழி” என்று தமிழின் சிறப்பினையும் தொன்மையையும் செவ்வனே எடுத்துரைத்தார் மற்றும் “கம்பன் கவிவடித்த மொழி எம் பாரதி கர்ஜித்த மொழி பிறந்து சிறந்த மொழிகளிலே சிறந்தே பிறந்த மொழியாம்” எம் அன்னை தமிழ் மொழி என்றவரிகளின் வழி, ஒருநாளின் சூரிய உதயம் தொடங்கி மறைவதற்குள் கம்பர் அவர்கள் 700 கவிதைகளை எழுதும் வல்லமைக்குரியவர் என்று கூறி, தானும் அக்கம்பர் வழி வந்ததமிழன் என்று கூறுவதில் பெருமிதக் கொள்வதாகக் கூறினார். மேலும்,கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையாரின் நட்பு தமிழர்களின் சிறந்த பண்பாட்டிற்கு அடையாளம் என்றும், தமிழர்கள் விருந்தினரை உபசரிக்கும் முறையினையும், வழியனுப்பும் முறையினையும் எடுத்துரைத்தார். நடுவர் அவர்கள், உரையின் இறுதியில் இன்றைய சூழலில்தமிழரின் நாகரிகமும் பண்பாடும் சிகரங்களே! என்று நல்லதொரு தீர்ப்பினை வழங்கினார். நிறைவாக தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் ரா.ஆனந்தி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில், முதல்வர், புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் 3500-க்கும் மேற்பட்டமாணவிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.