தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள், 3500 திருக்கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெறும்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்;

Update: 2025-06-05 10:50 GMT
நாகை மாவட்டம் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் எங்கு பார்த்தாலும் திருக்கோவில்களின் மணி ஓசைகளும், தீப ஒளியும் ஆராதனை முழக்கங்களும் கேட்கிறது. நாகை மண்ணில் தொன்மை வாய்ந்த திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோவிலில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில், 3 ஆயிரமாவது குடமுழுக்கு பெருவிழாவை கோலாகலமாக கொண்டாடியது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள், 3500 திருக்கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெறும். திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது என்பவர்களின் விமர்சனங்கள் இன்று மறைந்துள்ளது. திமுகவை விமர்சனம் செய்யும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்பினருக்கு, திமுக அரசால் வெற்றிகரமாக நடைபெற்று வரும் குடமுழுக்கு விழாக்களை மட்டுமே பதிலாக சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News