வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான 3.60 ஏக்கர் நிலம் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் அளவீடு செய்யப்பட்டு சர்வே கற்கள் பதிக்கப்பட்டது.
சர்வே;
தேனி மாவட்டம் போடியில் முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் மற்றும் புதூர் காதர் அவுலியா பள்ளிவாசலுக்கு சொந்தமான 3.60 ஏக்கர் நிலம் புதூர் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் காதர் அவுலியா பள்ளிவாசல் இயங்கி வரும் நிலையில் அதன் சுற்று பகுதிகளில் பலர் ஆக்கிரமித்து குடியிருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு இன்று போடி வட்டாட்சியர் சந்திரசேகரன் உத்தரவின்படி துணை வட்டாட்சியர் முத்துக்குமார் மற்றும் போடி நகர் நில அளவையர்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டது. போடி நகர் காவல்துறை ஆய்வாளர் கோபிநாத் உடன் வந்த காவலர்களின் பலத்த பாதுகாப்புடனும் கிராம நிர்வாக அலுவலர் வனிதா மேற்பார்வையில் அளவீடு பணியானது நடைபெற்றது. நில அளவீடு செய்யப்பட்டு சர்வே கற்கள் பதிக்கப்பட்டு சர்வே எண்கள் குறியீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இந்த 3.60 ஏக்கர் நிலம் முறையாக அளவீடு செய்யப்பட்டு முகைதீன் ஆண்டவர் மற்றும் காதர் அவுலியா பள்ளிவாசல் தலைவர் தங்கப்பா செயலாளர் பாரூக் மற்றும் பொருளாளர் ஜாகிர் உசேன் ஆகியோர்களிடம் போடி நகர் நில அளவையர் பணி நிறைவு கடிதம் வழங்கினார்.