கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனை கோருதல், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி கோருதல், சாலை வசதி ஏற்படுத்தி தருதல், குடிநீர் வசதி, வங்கி கடனுதவி, ஆக்கிரமிப்பு அகற்றம், நீர்நிலை துார்வாருதல் உட்பட அனைத்து துறை சார்ந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில், பொதுமக்கள் 346 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் 14 மனுக்கள் என மொத்தமாக 360 மனுக்களை அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.