திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் வரவேற்பு விழா
திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் வரவேற்பு விழா
Update: 2024-07-24 07:51 GMT
திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை மாணவர்களுக்கு வணிகவியல் துறை சார்பாக வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் வணிகவியல் மற்றும் கணினிபயன்பாட்டியல் துறையின் தலைவர் முனைவர் எஸ்.மகேஸ்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.பத்மநாபன் தலைமை தாங்கி பனார். அப்போது மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தி அவர்கள் தங்களுக்கான சிறந்த வேலை வாய்ப்பினைப் பெற்று செல்வதற்கான சிறந்த களமாக கே.எஸ்.ஆர் கல்லூரி இருக்கும் என்றும், மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு கல்வி களத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார். ஆடிட்டர் AK ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பட்டய கணக்காளர் படிப்பினை பற்றி ஒரு விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினார். மேலும் அதனை எவ்வாறு படிக்க வேண்டும் எனவும் அதன் மூலம் வேலை வாய்ப்பினை பெறுவது பற்றியும் மாணவர்களுக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்தார். அப்போது கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனம் சமூகத்தில், ஒருதலைசிறந்த மாணவர்களை உருவாக்கும் ஒரு கல்வி சாம்ராஜ்யம் என்று பாராட்டினார். AKS அகாடமி Er.விஜய் ரவி மாணவர்களாகிய நீங்கள் குடும்பத்திற்கும் சமூக மேம்பாட்டிற்கும் உங்களது பங்களிப்பை தரவேண்டும் எனவும், வருங்கால இந்தியாவின் முதன்மையான பதவிகளில் இருந்து நாட்டை மேம்படைய செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.