கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 121 கோடியை 5 லட்சம் செலவில் 3790 வீடுகள் கட்டப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்தார். மண் சுவர் மற்றும் குடிசை வீடுகளில் வசித்து வந்த மக்களின் வசிப்பிட தரத்தினை உயர்த்தும் வகையில் இத்திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்ட வருவதாக அவர் கூறினார். ஒவ்வொருவருக்கும் அலகுத் தொகையாக ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.