ராசிபுரத்தில் மண்டல அளவிலான செஸ் விளையாட்டு போட்டி ..
ராசிபுரத்தில் மண்டல அளவிலான செஸ் விளையாட்டு போட்டி ..;
By : Rasipuram King 24x7
Update: 2024-08-10 10:49 GMT

மண்டல அளவிலான செஸ் விளையாட்டு போட்டி அண்மையில், வெற்றி விகாஸ் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜேவிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக மூன்று பிரிவுகளில் 12 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், ஆறு பேர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் ஜேவிஎம் பள்ளியின் தாளாளர் V.முத்துசாமி, செயலாளர் P. காத்தமுத்து, பொருளாளர் K.சிவமணி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தனர்.