கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் குரூப் 2

கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் குரூப் 2

Update: 2024-09-14 08:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் குரூப் 2 & குரூப் 2 ஏ தேர்வு 10,821 பேர் எழுதினர். கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வினை 10,821 பேர் எழுதினர். பறக்கும் படை கண்காணிப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு இன்று கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 39 மையத்தில் 10,821 பேர் தேர்வு எழுதும் நிலையில், மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு மையத்திற்கு வருகை தந்தனர். காலை 10.00 மணி அளவில் தேர்வு தொடங்கியது. தேர்வு எழுத 90 சதவீதம் பேர் தேர்வு மையத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200 நபர்கள் தேர்வு எழுதும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் தேர்வு நேரத்துக்கு சற்று முன்பாக, நுழைவாயில் சாத்தப்பட்டு, தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டனர். மேலும், தேர்வு மையங்கள் அனைத்திலும் முழுவதும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News