வடக்கு காந்திகிராமம்- விளையாடும்போது சால் கழுத்தை இறுக்கியதால் பள்ளி மாணவி உயிரிழப்பு.

வடக்கு காந்திகிராமம்- விளையாடும்போது சால் கழுத்தை இறுக்கியதால் பள்ளி மாணவி உயிரிழப்பு.

Update: 2024-10-16 14:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வடக்கு காந்திகிராமம்- விளையாடும்போது சால் கழுத்தை இறுக்கியதால் பள்ளி மாணவி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், வடக்கு காந்திகிராமம், ராஜா நகர் 9-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி மகள் ரித்திகா வயது 13. இவர் அருகில் உள்ள தெரசா பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி மாலை 6 மணி அளவில், வீட்டின் அருகே கழுத்தில் சால் அணிந்து கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தார் ரித்திகா. அப்போது, எதிர்பாராத விதமாக சால் ரித்திகாவின் கழுத்தை இறுக்கியது. இதனால் மூச்சு திணறியதால் உடனடியாக லித்திகாவை அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரித்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சி அடைந்த ரித்திகாவின் தாயார் தமிழரசி வயது 55 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த ரித்திகாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர். விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவி கழுத்தை இறுக்கிய சாலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News