வேலாயுதம்பாளையம் முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய 4- பேர் கைது.

வேலாயுதம்பாளையம் முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய 4- பேர் கைது.

Update: 2024-10-10 06:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வேலாயுதம்பாளையம் முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய 4- பேர் கைது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, வேலாயுதம்பாளையம், ஹை ஸ்கூல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் நந்தகுமார் வயது 20. இவருக்கும் அருகில் உள்ள முருகம்பாளையத்தைச் சேர்ந்த முகமது நிசாருதீன் வயது 18 என்ற இளைஞருக்கும் ஏற்கனவே ஏற்பட்ட வாய் தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில் நந்தகுமார் அவரது வீட்டின் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, முகமது நிஷாருதீன் மற்றும் ஹை ஸ்கூல் மேடு பகுதியைச் சேர்ந்த விஜய், சரவணன், பாண்டியன், முருகம்பாளையத்தைச் சேர்ந்த இப்ராஹிம் ஆகிய ஐந்து பேரும், நந்தகுமாரை தகாத வார்த்தை பேசி தடி மற்றும் இரும்பு ராடால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தலை மற்றும் இடது கண் ஓரத்தில் காயமுற்ற நந்தகுமார் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதே சம்பவத்தில் விஜய்க்கு ஏற்பட்ட உள் காயம் காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நந்தகுமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முகமது நிசாருதீன், சரவணன், பாண்டியன், இப்ராஹிம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Similar News