கொலை மிரட்டல் விடுத்த 4 இளைஞர்கள் கைது

திண்டுக்கல் அருகே கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த 4 இளைஞர்கள் கைது

Update: 2024-12-26 05:12 GMT
திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த கணேஷ்(30) என்பவர் மொட்டணம்பட்டி, ஜம்ஜம் நகரில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நண்பர்களான இந்திரகுமார் மற்றும் செல்வம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த விக்ரமன்(27), ராகுல்(21), சரவணன்(19), விக்டர்ஆண்டனி(19) ஆகிய 4 பேர் கணேசின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.2500 பணத்தைப் பறித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News