கன்னிவாடி அருகே மான் கொம்புகளை விற்க முயன்ற 4 பேர் கைது
கன்னிவாடி அருகே மான் கொம்புகளை விற்க முயன்ற 4 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு, மான் கொம்புகள் பறிமுதல்
திண்டுக்கல், கன்னிவாடி அருகே மான் கொம்புகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வன பாதுகாப்பு படையினர் மற்றும் கன்னிவாடி வனசரக வனத்துறையினர் இணைந்து அப்பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டசின்னாம்பட்டி கிராமம் கோட்டைப்பட்டி செல்லும் சாலையில் தண்டபாணி என்பவர் வீட்டில் கடாமான் கொம்புகளை பதுக்கி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கடாமான் கொம்புகளை பறிமுதல் செய்து உமாசங்கர், சுதன்குமார், ராமக்கண்ணன், தண்டபாணி ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.