விழுப்புரத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை!

மேல்மலையனூர் தேர் திருவிழாவை விட்டு அறிவிப்பு;

Update: 2025-02-26 04:18 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்திருத்தேர் உற்சவத்தையொட்டி, மார்ச் 4-ம் தேதி ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.மார்ச் 4-ம் தேதிக்கு பதிலாக மார்ச் 15-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News