விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அரசு செய்திகள்;

Update: 2025-03-26 06:08 GMT
விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
  • whatsapp icon
புதுக்கோட்டை : கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த் ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுகை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது. இந்த வழக்கில் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா தன்னை விடுவிக்க கோரிய மனுவும், கவர் னரிடம் ஒப்புதல் பெறாமல் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய மனுவும் விசாரணையில் உள்ளது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது,விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். இதையடுத்து விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News