தருவைகுளம் பகுதியில் பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவை : பொதுமக்கள் கோரிக்கை!
தருவைகுளம் பகுதியில் பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

தருவைகுளம் பகுதியில் பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் மீன் பிடி தொழில் செய்யும் மக்கள் அதிகளவில் உள்ளனர். சமீப காலமாக பி.எஸ்.என்.எல்., செல்போன் சேவை சரியாக கிடைப்பதில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தருவைகுளம் பகுதியில் ஏற்கனவே அளிக்கப்பட்ட சேவையும் சரிவர கிடைக்கவில்லை. 4 ஜி சேவையும் அளிக்கப்படவில்லை. இந்த டவர் சரிவர இயங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதிக்கு போர்கால அடிப்படையில் 4ஜி சேவையை அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.