கடையநல்லூரில் நாம் தமிழா் கட்சி ஆதரவாளா்கள் 4 போ் கைது

நாம் தமிழா் கட்சி ஆதரவாளா்கள் 4 போ் கைது;

Update: 2025-04-08 00:58 GMT
கடையநல்லூரில் நாம் தமிழா் கட்சி ஆதரவாளா்கள் 4 போ் கைது
  • whatsapp icon
தென்காசியில் அருள்தரும் உலகம்மன் சமேத அருள்மிகு காசிவிஸ்வநாதா் திருக்கோயில் ஆலய குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சி ஆதரவாளா்களான சத்யபாமா அறக்கட்டளை தமிழ் வேத ஆகம பயிற்சி பாடசாலை நிறுவனத் தலைவா் சத்யபாமா உள்ளிட்ட சிலா் அதிகாரிகளை சந்திக்க முயன்றனராம். ஆனால் சந்திக்க முடியவில்லையாம். இதையடுத்து அவா்கள் கடையநல்லூரில் தங்கி இருந்தனா். இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் அவா்கள் போராட்டம் நடத்த கூடும் என கிடைத்த தகவலின்பேரில், புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மீனாட்சி நாதன் தலைமையிலான போலீஸாா், முன்னெச்சரிக்கை நடவடிககையாக சத்யபாமா, ராஜேந்திரன், தங்கவேலு, தமிழ்மணி ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்கள் கைதுக்கு நாம் தமிழா் கட்சியின் மாவட்டத் தலைவா் கணேசன், மாநில கொள்கை பரப்புச் செயலா் பசும்பொன் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்தனா்.

Similar News