மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தும் பயன் இல்லாத காரணத்தால் 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தும் பயன் இல்லாத காரணத்தால் 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தும் பயன் இல்லாத காரணத்தால் 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இலட்சிமியாபுரம், நூர்சாகிபுரம், இடைய பொட்டல்பட்டி, அழகு தேவேந்திரபுரம் உள்ளிட்ட 4 கிராம பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் மேலும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தும் பயன் இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரையும்,ஊராக வளர்ச்சித் துறையும், ஊராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும் மேலும் அரசு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறியும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்த வலியுறுத்தியும் 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து வன்னியம்பட்டி விலக்கில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஸ்டாலின் அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.