கோவை:ஆத்தூர் ரமேஷிடம் 4 மணி நேர சி.பி.சி.ஐ.டி விசாரணை நிறைவு
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர் ஆத்தூர் ரமேஷிடம் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.;
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர் ஆத்தூர் ரமேஷிடம் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேற்று 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ஏற்கனவே சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்த கார் டிரைவர் கனகராஜின் தம்பி தனபாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனபாலும் ரமேஷும் வழக்கில் தடயங்களை அழிக்க முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றிய நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல இவரிடம் விபத்து குறித்தும் அதற்கான காரணம் என்ன என்பது போன்ற விவரங்கள் கேட்கப்பட்டதாக தெரிவித்தனர்.