திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று புகையிலை விற்பனை குறித்து போலீசார் சோதனை நடத்தினர். அதில் முகமதுபேட்டை கிராமத்தை சேர்ந்த மணி (வயது 36) என்பவரிடம் இருந்து 20 பாக்கெட் புகையிலை, பாடி கிராமத்தை சேர்ந்த அருள் (37) என்பவரிடம் இருந்து 18 பாக்கெட் டுகள், ஆயிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (38) என்பரிடம் இருந்து 16 பாக்கெட்கள், பரதராமியை சேர்ந்த ரவி (45) என்பவரிடம் இருந்து 20 பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் 4 பேர் மீது சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாதன் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.