அரியலூர் கே வி எஸ் மருத்துவமனையில் கட்டணமில்லா இருதய பரிசோதனை முகாம்: 4 ஆயிரம் மதிப்புள்ள சேவைகள் இலவசம்

அரியலூர் கே வி எஸ் மருத்துவமனையில் கட்டணமில்லா இருதய பரிசோதனை முகாம் மற்றும் 4 ஆயிரம் மதிப்புள்ள சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.;

Update: 2025-08-11 14:50 GMT
அரியலூர், ஆக.11 - அரியலூர் கே வி எஸ் மருத்துவமனையின் 15 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15 முதல் 28 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கட்டணமில்லா இருதய பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கட்டணம் இல்லா இருதய பரிசோதனை செய்யப்படும். முகம் காலை 9 மணி முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.இதில் இருதய மருத்துவரின் ஆலோசனை, இசிஜி, எக்கோ ,சிபிசி ஹீமோகிராம் ,இரத்தத்தில் சர்க்கரை அளவு ,(வெறும் வயிற்றில்) சிறுநீரக செயல்பாடு பரிசோதனை,இரத்த கொழுப்பு பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை ,(வெறும் வயிற்றில்) உள்ளிட்ட 4 ஆயிரம் மதிப்புள்ள சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கே வி எஸ் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Similar News