நத்தம் அருகே 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சாலை மறியல்

Dindigul;

Update: 2025-12-09 02:01 GMT
நத்தம் அருகே 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சாலை மறியல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பரளிபுதூர் அருகே நடந்து சென்ற 5 அரசு பள்ளி மாணவிகள் மீது மதுரை நோக்கி வந்த கார் மோதிய விபத்தில் மாணவிகள் படுகாயம். இந்த விபத்து காரணமாக டோல்கேட் பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் திண்டுக்கல் ரூரல் டிஎஸ்பி சங்கர், சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன், நத்தம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் உள்ளிட்ட போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது தொடர்ந்து அனைவரையும் கைது செய்ய காவலர்கள் முற்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சாலை மறியலால் மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News