வெள்ளகோவில் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ 40க்கு விற்பனை

வெள்ளகோவில் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ 40க்கு விற்பனை செய்யப்பட்டது

Update: 2024-08-12 17:11 GMT
வெள்ளகோவில் நகராட்சி வாரச்சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பை, வேலப்ப நாயக்கன்வலசு, திருமங்கலம், உப்பு பாளையம், பாப்பம்பாளையம், மேட்டுப்பாளையம், வள்ளிரிச்சல், வரக்காலிபாளையம் ஆகிய பகுதி சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் இருந்து பயிரிடப்பட்ட காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி செல்வார்கள். சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை நிலவரம் கிலோவாரியாக பச்சை மிளகாய்ரூ.120, பீட்ரூட், பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய் ரூ. 60க்கும், முட்டைக்கோஸ், பீர்க்கங்காய் ரூ.50-க்கும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தக்காளி ரூ.40க்கும், முள்ளங்கி, வெண்டைக்காய் ரூ.30க்கும், பூண்டு ரூ.280க்கும் விற்கப்பட்டது. இவற்றுடன் கீரை வகைகள் ஒரு கட்டு ரூ.10, மல்லித்தழை  ஒரு கட்டு ரூ.20 புதினா கட்டு ஒன்று ரூ.10 வாழைத்தண்டு ஒன்று ரூ.20 வாழைப்பூ ஒன்று ரூ.20, வாழை பூ ஒன்று ரூ.30க்கும், காலிபிளவர் ஒன்று ரூ.40-க்கும் சுரைக்காய் ஒன்று ரூ.8க்கும் விற்பனையானது.

Similar News