தேன்கனிக்கோட்டை:ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து-40 பயணிகளின் காயம்.
தேன்கனிக்கோட்டை:ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து-40 பயணிகளின் காயம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஅள்ளி பகுதியில் உள்ள பாலத்தின் மீது மதுரையிலிருந்து நேற்று இரவு 10 மணி அளவில் தனியார் ஆம்னி பேருந்து 40 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த பள்ளத்தில் பஸ் உருண்டு விழுந்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராயக்கோட்டை போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.