ஓசூர் அருகே லாரியில் கடத்த முயன்ற 400 கிலோ குட்கா பறிமுதல்.
ஓசூர் அருகே லாரியில் கடத்த முயன்ற 400 கிலோ குட்கா பறிமுதல்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் ராயக் கோட்டை சாலையில் உள்ள பைரமங்கலம் ஜங்ஷன் அருகே வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அந்த சமயம் அந்த வழியாக வந்த மினி கன்டெய்னர் லாரியை நிறுத்தினர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் அந்த வாகனத்தை துரத்தியதால் டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருஙறது தப்பி ஓடிவிட்டார். இதை அடுத்து போலீசார் வாகனத்தை சோதனையிட்டதில் அதில் 400 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 3 லட்சத்து 48 ஆயிரத்து 600 ரூபாய்யாகும் தொடர்ந்து புகையிலை பொருட்கள் மற்றும் மினி கன்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.