பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் பெற்றோரை இழந்த 41குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணைகள் வழங்கி வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் பேச்சு*
தமிழக முதலமைச்சர் மற்ற முதலமைச்சர்களிடமிருந்து வேறுபட்டவர்,எதிர்காலத்தை உணர்ந்து செயல்படுபவர்-பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் பெற்றோரை இழந்த 41குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணைகள் வழங்கி வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் பேச்சு*;
தமிழக முதலமைச்சர் மற்ற முதலமைச்சர்களிடமிருந்து வேறுபட்டவர்,எதிர்காலத்தை உணர்ந்து செயல்படுபவர்-பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் பெற்றோரை இழந்த 41குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணைகள் வழங்கி வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் பேச்சு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டமன்ற அரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துறையின் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு தகுதி வாய்ந்த 41 குழந்தைகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூ. 5 லட்சத்து 62 ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை ஆணைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,பட்டாசு விபத்துகளில் தாய்,தந்தையரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக அவர்களின் 18 வயது வரை மாதம் ரூ4 ஆயிரம் உதவித்தொகையும்,தாய்,அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவரை மட்டும் இழந்திருந்தால் அவர்களுக்கு மாதம் ரூ 2 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் இதற்காக அரசு ரூ5 கோடி வைப்புத்தொகையாக மாவட்ட ஆட்சியரை தலைவராக் கொண்டு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.தமிழக முதலமைச்சர் மற்ற முதலமைச்சர்களிடமிருந்து வேறுபட்டவர் என்றும் எதிர்காலத்தை உணர்ந்து செயல்படுபவர் அதனால்தான் பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது,அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடக்காடாது என்பதற்காக நிதியை துரிதமாக ஒதுக்கி அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்து உள்ளார் என்றார்.