கரூரில் கூட்ட நெரிசலில் இறந்து போன 41 பேருக்கு திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
திருச்செங்கோட்டில் நடந்த நகர மன்ற கூட்டத்தில் கரூரில் நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போன ஆண்கள் பெண்கள் சிறு குழந்தைகள் என 41 பேருக்கு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் என பலரும்மௌன அஞ்சலி செலுத்தினார்கள்;
திருச்செங்கோடு நகர்மன்ற சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தார் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். திருக்குறளை வாசித்து கூட்டத்தை தொடங்கிய நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நேற்று கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி இறந்து போன 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நகரமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் என அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.இவ்வளவு பெரிய துயர சம்பவம் நடைபெற்ற நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்ட தமிழ்நாடு முதல் அமைச்சர்,மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாககூறினார் தொடர்ந்து தீர்மானங்களின் மீது பேசிய நகரமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கூறியதாவது பத்தாவது வார்டு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல் பண்டிகை காலங்களில்கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வியாபாரிகளை அழைத்து பேசிய நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கலாம் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு சாலையோர வியாபாரிகள் எங்கெங்கு வியாபாரம் செய்யலாம் எங்கு எங்கு செய்யக்கூடாது என்பது குறித்து அவர்களுக்கு எடுத்து கூறவே இந்த கூட்டம் நடைபெற்றது அதுமட்டுமல்லாது கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளுவார்கள் என்பதால் தகவல் தெரிவிக்கவில்லைஇரண்டாவது வார்டு அதிமுக உறுப்பினர் கார்த்திகேயன் போர்வெல் மோட்டர்கள்மாற்றி அமைத்து தரப்படும் என பல வார்டுகளுக்கு கூறியுள்ளீர்கள் எனது வார்டு பகுதியில் எதுவும் அவ்வாறு அறிவிக்கப்படவில்லை எங்களது பகுதியில் நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது கோவில் பகுதிகளில் பெண்கள் செல்ல முடியாத அளவுக்கு நாய்கள் அதிகமாக உள்ளது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் துப்புரவு அலுவலர் சோழராஜா இரண்டு கட்டங்களாக நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி செலுத்தியுள்ளோம் 250 நாய்களுக்கு முதன்முறையாகவும் 96 நாய்களுக்கு இரண்டாவது கட்டமாகவும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது மூன்றாவது கட்டமாக விரைவில் பணிகள் நடக்க உள்ளது. ஒன்றாவது வார்டு திமுக நகரமன்ற உறுப்பினர்மாதேஸ்வரன் 1, 7, 8, 10 ஆகிய வார்டுகளில்நாளைக்கு ஒரு முறை தான் ஆற்று குடிநீர் வருகிறது இரண்டு நாளைக்கு ஒருமுறை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு அனைத்து பகுதிகளிலும் சாலை போடும் பணி நடைபெற்று வருவதாலும் ஆவத்தி பாளையத்திலிருந்து வரும்குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதெல்லாம் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது இதனை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு சில நாட்களுக்குள் முறையாக தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும். நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகராட்சி தரம் உயர்த்தப்பட்டதற்கு பிறகு நகராட்சியில் புதிய பொறுப்புகளுக்கு வந்துள்ளவருவாய் ஆய்வாளர் படவரைவாளர் உதவி பொறியாளர்கள்பணி ஆய்வாளர்கள் பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளைஅறிமுகம் செய்து வைத்தார். 16வது வார்டு அதிமுக உறுப்பினர் மைதிலி காந்தி, நாமக்கல் ரோட்டில் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சீராக காணப்படுகிறது பல பகுதிகளில் தண்ணீர் லீக் ஆகிறது இதனை சரி செய்ய வேண்டும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உடனடியாக சரி செய்யப்படும் 27 வது வார்டுதிமுக நகர் மன்ற உறுப்பினர் தமிழரசன் என்கிற அண்ணாமலை எனது வார்டு பகுதியில் மேல்நிலைத் நீர் தேக்க தொட்டிகளை சீரமைத்து தர வேண்டும் மேல் மூடிகள் திறந்து இருப்பதால் புழுக்கள் உருவாவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் நரி பள்ளம் பகுதியில் மழை அடிவாரமாக இருப்பதால் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி காய்ச்சல் அதிகமாகும் சூழ்நிலை உள்ளது தினசரி கொசு மருந்து அடிக்க வேண்டும்நரி பள்ளம் பகுதியில் ஒரு ஆள் துணைவியில் அடி பம்பை நீக்கிவிட்டு மின்மோட்டார் உடன் கூடிய ஆழ்துளை கிணறை அமைத்து தர வேண்டும் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் உடனடியாக கொசு மருந்து அடிக்கவும் பட்டியல்தயாரிக்கப்பட்டு முன்னுரிமை உள்ள இடங்களுக்கு முறைப்படிகொசு மருந்து அடிக்கப்படும் நகராட்சி பொறியாளர் சரவணன் நகராட்சியில் மின்கட்டண பாக்கி25 கோடி ரூபாய் உள்ளது. எனவே புதிய மின்மோட்டார் உடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க முடியாது இருக்கும் அடி பம்பை சரி செய்து தருகிறேன் உறுப்பினர்கள் யாரும் மின்னோட்டார் உடன் கூடிய ஆழ்துளை கிணறை கேட்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் நகராட்சியின் வரவு செலவு இந்த மாதம் 77 லட்ச ரூபாய் பற்றாக்குறையில் உள்ளது எனவே நகராட்சியில் செலவினங்களை குறைத்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை உருவாக்க வேண்டும் என பணியாற்றி வருகிறோம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர கேட்டுக்கொள்கிறோம் 24 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் மகேஸ்வரி எனது வார்டு பகுதியில் மீன் கழிவுகள் கோழிக்கழிவுகளை ரோட்டில் கொட்டி விடுகின்றனர். அவ்வாறு கொட்டுகிறவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் இதனால் நாய் தொல்லை அதிகமாகி தெருவில் நடக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது என ஆதாரத்துடன் வீடியோ காட்சிகளை காட்டி கூறினார் ஐந்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராஜா இரண்டு மற்றும் ஐந்தாவது வார்டு பகுதிகளை இணைக்கும் பகுதியில் சுமார் 50 மீட்டர் அளவுக்குத்தான் ரோடு இல்லாமல் உள்ளது அதனை போட்டுக் கொடுத்தால் வசதியாக இருக்கும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வடிகால் உடன் சாலை அமைக்க நிதி வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.