தர்மபுரியில் 41 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை
தர்மபுரி உழவர் சந்தையில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு 41 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை;
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் இன்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு காலை முதலே ஏராளமான நுகர்வோர் காய்கறிகள் பழங்கள் வாங்க குவிந்தனர் இதனால் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரையில் சுமார் 41 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகி உள்ளதாக உழவர் சந்தை வேளாண் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.