விராலிமலை: சிறுமி மாயம்: போலீசில் புகார!
காணவில்லை;
Update: 2025-03-28 04:29 GMT

விராலிமலை ஒன்றியம் மண்டையூர் பகுதியை சேர்ந்தவர் கருத்தன். இவரது 17 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு உடுமலைப் பேட்டையில் உள்ள பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறி சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. வேலைக்கும் செல்லவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மண்டையூர் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமி கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.