புனித ரமலான் திருவிழாவை முன்னிட்டு ராசிபுரத்தில் சமூக நல்லிணக்க நீர் -மோர் வழங்கும் நிகழ்வு!!
மக்கள் நலக்குழுவின் அறக்கட்டளை சார்பில் புனித ரமலான் திருவிழாவை முன்னிட்டு சமூக நல்லிணக்க நீர் -மோர் மற்றும் பழங்கள் வழங்கினர்.;
By : Rasipuram King 24x7
Update: 2025-03-31 11:11 GMT
இராசிபுரம் மக்கள் நலக்குழுவின் அறக்கட்டளை சார்பில் புனித ரமலான் திருவிழாவை முன்னிட்டு சமூக நல்லிணக்க நீர் -மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.. புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பு தொழுகை வழிபாடு திருவிழா ஆண்டாண்டு காலமான வழக்கமாக இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் உள்ள பெரிய பள்ளிவாசல் எனப்படும் ஜாமியா மஜித் பள்ளி வாசலில் இருந்து நூற்றுக்கணக்கான இஸ்லாமிய சகோதரர்கள், சேலம் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது சிறப்பு தொழுகை வழிபாடு செய்து திரும்பும் நிலையில் சமூக நல்லிணக்க நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து பல ஆண்டுகளாக இராசிபுரம் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கடுமையான கோடை வெயிலில் பயணம் செய்யும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகள் அனைவருக்கும் நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் குழுவின் தலைவர் முன்னாள் கவுன்சிலர் வி பாலு, செயலாளர் நல்வினை செல்வன், பொருளாளர் கா. முருகன்,அறக்கட்டளை இயக்குனர்கள் அ. முருகேசன். பா.மோகன் தாஸ், ப.ஆனந்தராஜ், ஆர்.இராமசாமி, பவர் மஸ்தான்,மற்றும் பிரியங்கா செல்வராஜ், முனைவர் பிரதாப். அஸ்வின், கதிரவன், ஜாபர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை சிறப்பாக செய்தனர். மேலும் இதனைப் பெற்றுக் கொண்ட இஸ்லாமிய சகோதரர்களும், மற்றும் பொதுமக்களும், மக்கள் நல குழு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.