ஆண்டிமடம் வட்டார அளவில் கலைத்திருவிழா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 446 பேருக்கு பரிசு
ஆண்டிமடம் வட்டார அளவில் கலைத்திருவிழா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 446 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது,;
அரியலூர், ஏப்.6- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் 2024-2025 ம் ஆண்டிற்கான ஆண்டிமடம் வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆண்டிமடம் ஸ்ரீ சௌபாக்கியா கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. பரிசளிப்பு விழா விழாவிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் நெப்போலியன்சுதன்குமார், சந்திரலேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் பயிற்றுநர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சிலுவைச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம், பட்டணங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டுப்புற நடனத்துடன் பரிசளிப்பு விழா கோலாகலமாக துவங்கியது. கலைத்திருவிழா நிகழ்ச்சியானது பள்ளி,வட்டார, மாவட்ட,மாநில அளவில் நடைபெற்றது. கலைத்திருவிழா போட்டியானது இசை, நடனம், நாடகம், ஓவியம், கவிதை, இலக்கியம் என பல வகை கலைவடிவங்களை உள்ளடக்கி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டுவரவும், ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகிறது. இதில் ஒப்புவித்தல் போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலம், கதை கூறுதல், திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேட போட்டி, வண்ணம் தீட்டுதல், களிமண் பொம்மை செய்தல், தேசபக்தி பாடல்கள், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், பேச்சுத்திறன், மெல்லிசை பாடல்கள், கிராமிய நடனம், செவ்வியல் இசை, தனிநபர் நடிப்பு, நகைச்சுவை வழங்குதல், பல குரல் பேச்சு, மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, இலக்கிய நாடகம், காகிதக்கூழ்/ செதுக்கு சிற்பம், பானை ஓவியம், வீதிநாடகம், இலக்கிய நாடகம், பாரம்பரிய கருவிகள் இசைத்தல், பிறவகை நடனம் போன்ற பல வகை போட்டிகள் வட்டார, மாவட்ட, மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. ஆண்டிமடம் ஒன்றியத்தில் மேற்கண்ட போட்டிகளில் முதல் பரிசு 202 மாணவ மாணவிகளும், இரண்டாம் பரிசு 134 மாணவ, மாணவிகளும் மூன்றாம் பரிசு 110 மாணவ மாணவிகளும் தேர்வாகி இருந்தனர். மொத்தம் 446 மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.446 மாணவமாணவிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் நெப்போலியன் சுதன்குமார், சந்திரலேகா, குடிமைப்பணி சமூக அமைப்புகள் உறுப்பினர் திருப்பதி, நன்செய் அறக்குழு ஒருங்கிணைப்பாளர் சுமதிபாலமுருகன், கவரப்பாளையம் கல்வியாளர் அப்சரா வெங்கடேசன்,ஸ்ரீ சௌபாக்கியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அறிவழகன், குவாகம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (பொ) ஸ்ரீ காந்த், திருக்களப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சித்ரா, அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அமராவதி, தங்கமணி, பாலா, அரியலூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் செந்தில், தா. பழூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சிவா, ஆண்டிமடம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ரவிச்சந்திரன், சத்தியபாமா, அகிலா,உத்திராபதி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து மாணவச் மாணவிகளை பாராட்டினர். ஆண்டிமடம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் அகிலா தொகுத்து வழங்கினார் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு நமது தமிழக அரசு. கலைஅரசன், கலை அரசி என்ற பட்டம் வழங்கி மாணவர்களை கெளரவித்து வருகிறது. மேலும் மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் மாணவ, மாணவியர்களை தமிழக அரசால் பல்வேறு நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆண்டிமடம் வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் கேடயம், சான்றிதழ் , பரிசளிப்பு விழா நடத்தி மாணவர்கள் பாராட்டபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பயிற்றுநர் சத்தியபாமா நன்றி கூறினார். .