இரண்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தீர்ப்பு;
தேனி மாவட்டம் பெரியகுளம் மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணராஜ் வயது 27. இவர் 2023 ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தும், ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில். தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்று ஹரி கிருஷ்ணராஜ் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு இந்திய தண்டனைச் சட்டம் 376 இன் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றும் 5000 ரூபாய் அபராதம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு திருத்த சட்டம் 2019ன் பிரிவு 6ன் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும், விதித்ததோடு கோக்சோ சட்டப்பிரிவு 10 இன் கீழ் மேலும் ஐந்து வருட கால சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்ததோடு அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்றாண்டுகள் மெய்க்காவல் சிறை தண்டனையும், என மூன்று பிரிவின் கீழ் மொத்தம் 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு பத்து லட்ச ரூபாயும், மற்றும் ஒரு சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் என 15 லட்ச ரூபாய் தமிழக அரசு, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நிதி வழங்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.