வீட்டின் பூட்டை உடைத்து 46 பவுன் தங்க நகை கொள்ளை
வடமதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 46 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை;
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த காணப்பாடியை அடுத்த சித்தூரை சேர்ந்த பழனிகுமார்(40) இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயம்புத்தூர் சென்று இன்று மதியம் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 46 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்ததைத் தொடர்ந்து வடமதுரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் சோதனை நடைபெற்றது. மேலும் சம்பவ இடத்தில் வேடசந்தூர் டிஎஸ்பி.பவித்ரா விசாரணையை துரிதப்படுத்தினார்.