நாமக்கல் தாலுக்கா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்.
தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார் மாநிலத் தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-07-22 12:17 GMT
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றப்பட்டுள்ள மின் கட்ட உயர்வை திரும்ப பெற வேண்டும். தொழில் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இக்கட்டண உயர்வு தொழில்களை கடுமையாக பாதிக்கும் அதனை விளக்கிக் கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடந்து முடிந்த ட்ரெய்லர் உரிமையாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. நாமக்கல் மாநகரில் மின்தடை அறிவிப்பை முறையாகவும் சரியாகவும் செயல்படுத்த இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இக்கூட்டத்தில் பொருளாளர் மல்லீஸ்வரன் வரவு செலவு வாசித்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம் இனச் செயலாளார் ஹரி உள்ளிட்ட தில்லான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.