நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மீட்பு குழுவின் பணிவான வேண்டுகோள்!
நாமக்கல் மோகனூர் ரோட்டில் சுமார் நூறு ஆண்டு காலமாக 9 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் 400 -க்கு மேற்பட்ட உள்நோயாளிகளும் 1,500 -க்கு மேற்பட்ட புறநோயாளிகளும் பயன்படுத்தி வந்த நிலையில் அரசு மருத்துவமனை இயங்கி வந்தது.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-07-22 13:39 GMT
பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் தாலுக்கா மருத்துவமனையாகவும், டாக்டர் கலைஞர் அவர்களால் தலைமை மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்பட்டு, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெறும் மருத்துவமனை யாகவும் செயல்பட்டு வந்தது. இவ்வாறு திறம்பட இயங்கி வந்த மருத்துவமனை அகில இந்திய தரச் சான்றிதழும் பெற்றிருந்தது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டவுடன் நாமக்கல் நகரில் இயங்கி வந்த மருத்துவமனை நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் மூன்று கிலோமீட்டர் உள்புறமாக தள்ளி உள்ள மருத்துவக் கல்லூரிக்கு முழுமையாக மாற்றப்பட்டு விட்டது. தற்போது நாமக்கல் நகர் மருத்துவமனை வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. நாமக்கல்மருத்துவமனை, நகர மக்கள் மட்டுமன்றி, சுற்றுப்புற கிராம மக்கள், முசிறி, தொட்டியம், துறையூர், சேந்தமங்கலம், காட்டுப்புத்தூர், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் போன்ற அனைத்து பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர். காரணம் பஸ் நிலையத்திலிருந்து இரண்டு நிமிடத்தில் மருத்துவமனையை எட்டி விடலாம். புதிய மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு செல்வது என்றால் ரூபாய் 500 முதல் 1000 ரூபாய் வரை செலவாகிறது.அவசர சிகிச்சைகோ, மாரடைப்பு ஏற்பட்டாலோ, பாம்பு விஷ ஜந்துக்கள் கடித்தாலோ, பிரசவ வலி வந்தாலோ உடனே விரைவான சிகிச்சை என்பது முடியாத காரியமாக உள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகம் வரை பஸ்ஸில் செல்லக்கூடியவர்கள், அங்கிருந்து மருத்துவமனைக்கு நடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. நாங்கள் 10 மாத காலமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர்கள் சொன்ன ஒரே பதில் மருத்துவர்கள் இல்லை என்பதுதான்.ரிப்போட்டர் பத்திரிகையின் உறுதிப்படுத்தப்படாத தகவலாக உயிருக்கு போராடிய நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது.மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்வதற்கு தடவழிகள் கண்டுபிடிப்பது மிக மிக சிரமம். அனைத்து வசதிகளும் நிரம்பப்பெற்ற நாமக்கல் மருத்துவமனையில் மீண்டும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர சிகிச்சை பிரிவும், புற நோயாளிகள் பிரிவுமுடைய மருத்துவமனையை நீங்கள் நினைத்தால் ஏற்படுத்தமுடியும். உங்களின் பல நியாயமான கோரிக்கைகள் தமிழக அரசால் நிறைவேற்றபட்டுள்ளது நாங்கள் அறிவோம். ஆகவே நாமக்கல் மக்களின் மீது தாயுள்ளம் கொண்டு கருணையோடு மருத்துவமனை இயங்குவதற்கு தமிழக அரசை வலியுறுத்தும் படியும், மீட்பு குழு நடத்தும் போராட்டத்திற்கு கேட்டுகொள்கின்றோம். தலைவர் Dr.ஸ்ரீ நித்ய சர்வானந்தா ஒருங்கிணைப்பாளர் , செய்தி தொடர்பாளர் K.வாசு சீனிவாசன், துணைத் தலைவர் B.பாலசுப்ரமணியம், துணைத்தலைவர் P.ராஜாராம், செயலாளர், B.பாஸ்கர் மருத்துவர் இணைச் செயலாளர் A.கமல்பாஷா, பொருளாளர் K.இராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.