விஜய் முதலமைச்சரான பிறகு பெண்களை தங்க தட்டில் வைத்து தாங்குவோம்.
உண்மையான தொண்டர்கள் தவெக விட்டு செல்ல மாட்டார்கள் ( வைஷ்ணவிக்கு மறைமுக தாக்கு) நாமக்கல்லில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பேசினார்;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-07-23 12:02 GMT
Tvk
உண்மையான தொண்டர்கள் தவெக விட்டு செல்ல மாட்டார்கள் ( வைஷ்ணவிக்கு மறைமுக தாக்கு) நாமக்கல்லில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பேசினார்.தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நாமக்கல்லில் தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் பேசும் போது... தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள உண்மையான தொண்டன் வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டான், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் சில காலம் இருந்து விட்டு கட்சி பதவி சரியில்லை என குறைச்சொல்லி மீண்டும் வெளியில் சென்று விடுவார்கள் அதனால் தான் கட்சியில் உழைத்த உண்மையான தொண்டனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என மறைமுகமாக கோவை வைஷ்ணவிக்கு எதிராக பேசினார். தலைவர் விஜயை பலர் தவறாக பேசி வருகின்றனர் ஆனால் விஜய், தான் உட்பட கட்சியினர் யாரையும் மரியாதைக்குறையாக பேசுவது கிடையாது, யாரையும் அவ்வாறு பேசக்கூடாது என விஜய் கூறியுள்ளார், அரசியலை நேருக்கு நேராக சந்தியுங்கள். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு வந்தவர் விஜய் சினிமாவில் ஓய்வு பெற்று வரவில்லை, இன்னும் 15, 20 ஆண்டுகள் உச்சம் இருப்பதை விட்டு விட்டு வருவது என்றால் மக்களுக்கு சேவை செய்யவே வந்தவர்.எக்காரணத்தும் கொண்டும் ஊழல் என்ற வார்த்தை கிடையாது என்றும் மக்களுக்கு சேவை செய்யவே வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக வெற்றிக் கழகம் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர், விஜய் வந்தால் செய்வார் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் வரும் 2026 ம் ஆண்டு முதலமைச்சராக வரும் போது பெண்களை தங்க தட்டில் வைத்து தாங்குவோம், இன்னும் தேர்தல் வர 8 மாதங்களே இருக்கின்ற நிலையில் கட்சியில் உள்ள பூத் உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும் என்றார் அவர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.