மாநில அளவில் நடைபெற்ற பென்டத்லான் போட்டியில் நவோதயா பள்ளி மாணவர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை வெற்றி.
தமிழ்நாடு பென்டத்லான் அசோசியேசன் நடத்திய மாநில அளவிலான பென்டத்லான் போட்டி கடந்த ஜூலை மாதம் 26. 27 ஆம் தேதிகளில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்றது.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-08-01 13:15 GMT
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அதில் நமது நவோதயா பள்ளி மாணவர் இரா. கர்ஷின் (பத்தாம் வகுப்பு ) பங்கேற்று வாள் வீச்சு, நீச்சல்,தடைஒட்டம். துப்பாக்கி சுடுதல், ஒட்டப்பந்தயம். ஆகிய ஒருங்கினைந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெண்கலப்பதக்கத்தப் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பள்ளியின் பொருளாளர் கா தேனருவி வழங்கி மாணவரை பாராட்டினார். அவர் பேசுகையில் “பழங்காலத்தில் போர் வீரர்களுக்கு குதிரை ஏற்றம், வாள் வீச்சு, நீச்சல் இவைகள் கலைகளாக கற்றுத்தரப்பட்டது. அது தற்போது போட்டியாக மாற்றம் பெற்று 1912 முதல் கோடை கால ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றுள்ளது. . இந்த போட்டியில் முறையான பயிற்சி, தொடர் முயற்சி இருந்தால் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு வெற்றி பெற்று உலகப் புகழ் பெற்று மாபெரும் சாதனையாளராக வாழலாம் , அதற்கான முயற்சியையும், பயிற்சியையும் மாணவர் கர்ஷின் எடுக்க வேண்டும். புகழ்பெறவேண்டும் என்று வாழ்த்தினார். மேலும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், சகமாணவ, மாணவியர்கள் அனைவரும் பாரட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.