ஆண்டிபட்டியில் உள்ள நன்மை தருவார்கள் திருத்தலத்தில் தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை.
தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு கும்பாபிஷேகம் முடிந்து 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.;
ஆண்டிபட்டியில் உள்ள நன்மை தருவார்கள் திருத்தலத்தில் தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மதுரை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அருகில் அமைந்துள்ள நன்மை தருவார்கள் திருத்தலத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு கும்பாபிஷேகம் முடிந்து 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. கடந்த 2024 டிசம்பர் 28ஆம் தேதி ஐயப்ப சுவாமி கோவிலில் உள்ள 49 அடி உயர சர்வ சக்தி மாகாளியம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகமும் மற்றும் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. மேலும் புதிதாக நிறுவப்பட்டுள்ள 21 அடி உயர குதிரை மேல் இருக்கும் அய்யனார் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் ,ஸ்ரீ குபேர வராகியம்மன் ,ஸ்ரீ கௌமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசேஷ பூஜைகளும் ,அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று பௌர்ணமி சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜையும் நடைபெற்றது. விழாவில் நலம் தரும் அய்யனார் ,பத்ரகாளியம்மன் பீடத்தில் தெய்வங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . விழாவை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாகி முத்து வன்னியம் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.