நாயால் திடீரென வாகனங்கள் மோதிக்கொண்டதில் 5பேர் லேசான காயம்

ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கிட்ட நாயால் திடீரென நிறுத்தப்பட்ட கார்,கண்டெய்னர் லாரி, அரசு பேருந்து அடுத்து மோதிக்கொண்டதில் 5பேர் லேசான காயம்;

Update: 2024-02-23 11:55 GMT
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓசூர் அடுத்த சூளகிரி அருகே அழகுபாவி என்னுமிடத்தில் ஒசூர் நோக்கி வந்த கார் ஒன்று நாய் சாலையை கடந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் நிறுத்தப்பட்டதால், பின்னால் சீரான வேகத்தில் கண்டெய்னர் லாரியும், அதன்பின் அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் அரசு பேருந்தில் பயணித்த 5பேர் லேசான காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு சூளகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த வாகனங்கள் மோதிக்கொண்டதால் சாலையில் இருந்த வாகனங்களை போலிசார் மீட்டனர்.தேசிய நெடுஞ்சாலையில் 5 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது பின்னர் போலிசார் போக்குவரத்து நெரிசலை குறைத்ததால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News