சேலத்தில் மொபட்டில் வைத்திருந்த 5 பவுன் நகை திருட்டு
3 சிறுவர்கள் கைது போலீசார் நடவடிக்கை
சேலம் அம்மாபேட்டை வைத்தி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). இவர் கடந்த 31-ந் தேதி இரவு தனது மனைவியுடன் சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர்கள் பேராலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து மொபட்டில் மீண்டும் வீட்டுக்கு சென்று மொபட்டின் இருக்கையின் கீழ் உள்ள பெட்டியில் நகை வைத்திருந்த பையை பார்த்தனர். அப்போது அது காணாததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் 5 பவுன் நகை மற்றும் ரூ.400 ஆகியவை வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் தான் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டில் ஈடுபட்டது 15, 16 வயதுடைய 3 சிறுவர்கள் என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.