இளம் பெண் வைல்திருந்த 5 பவுன் தங்க செயின் மாயம்
பஸ்சில் பயணித்த போது பையில் இருந்த தங்க செயின் திருடுபோனது;
திருச்சி, காட்டூர், புகழ்நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் பென்சைர் (19), இவரது 5 பவுன் தங்க செயின் ஜன.19ம் தேதி அறுந்துபோனது. இதனால் செயினை ஒட்ட வைப்பதற்காக இவர் தன் நண்பர் சுபைருடன் பஸ்சில் சென்றுள்ளார். இந்நிலையில் காந்தி மார்க்கெட், மகாலட்சுமி நகர் அருகே பஸ்சில் இருந்து இறங்கி தான் செயின் வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் இருந்த தங்க செயின் திருடுபோனது, தெரியவந்தது. இது குறித்து பென்சைர் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.