சேலத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-04-08 09:05 GMT
சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கடம்பூர் முனியப்பன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 37), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காசிபிரசாத் (24), முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த இம்தியாஸ் (27), திருநாவுக்கரசர் தெருவை சேர்ந்த தினேஷ் (24), அம்மாபேட்டை மாருதிநகரை சேர்ந்த மதீஷ் (25) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரத்து 600 மதிப்பிலான 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News