கான்கிரீட் மேற்கூரையாக மாற்றும் பணிகளுக்காக தாங்கள் சிறு வயதில் இருந்து சேமித்த தொகை ரூ. 5 ஆயிரத்தை தலைமை ஆசிரியர் ரவியிடம் நன்கொடையாக வழங்கினார்.*
கான்கிரீட் மேற்கூரையாக மாற்றும் பணிகளுக்காக தாங்கள் சிறு வயதில் இருந்து சேமித்த தொகை ரூ. 5 ஆயிரத்தை தலைமை ஆசிரியர் ரவியிடம் நன்கொடையாக வழங்கினார்.*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயின்ற இரட்டையர்களான மதிவிழி, மதிமுகிலன் இன்று தொடக்கப்பள்ளி படிப்பை முடித்து வெளியேறும் நிலையில், ஓடு வேயப்பட்ட கட்டடத்தை, கான்கிரீட் மேற்கூரையாக மாற்றும் பணிகளுக்காக தாங்கள் சிறு வயதில் இருந்து சேமித்த தொகை ரூ. 5 ஆயிரத்தை தலைமை ஆசிரியர் ரவியிடம் நன்கொடையாக வழங்கினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்த மாடசாமி - தங்க ரதி தம்பதிகளின் இரட்டை குழந்தைகளான மதிவிழி, மதிமுகிலன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தனர். இருவரும் இன்று தொடக்க வகுப்பு முடிந்து பள்ளியை விட்டு வெளியேறுகின்றனர். இதுவரை ஆஸ்பெஸ்டாஸ் ஓடு வேயப்பட்ட கட்டடம் சிமிண்ட் கான்கிரீட் கட்டடமாக கட்டப்பட உள்ளது. தங்கள் பயின்ற பள்ளியில் நடைபெற உள்ள கட்டுமான பணிகளுக்காக, தங்களால் முடிந்த சிறிய தொகையாக, சிறு வயது முதல் சேர்த்து வைத்த ரூ. 5 ஆயிரத்தை தலைமை ஆசிரியர் ரவியிடம் இரட்டையர் நன்கொடையாக வழங்கினர். மேலும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசாக பேனாக்களையும், தலைகீழாக பார்த்தாலும் தமிழ் என தெரியும் பதாகையையும், உடன் பயிலும் மாணவர்களுக்கு பென்சில் பெட்டிகளையும் வழங்கினர்.